loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

தன்னலத்தை மறந்து பிறருக்கு உதவ வந்த 5 நல்லுள்ளங்கள்! #BeatTheVirus

களக் கதைகள்
15 June, 2020
5:06 PM

நெருக்கடி ஏற்படும்போது, கிராமப்புற சமூகங்கள் ஒன்றுபடுகின்றன. அவர்களின் அற்புதமான மகத்தான செயல்கள் அவர்களின் உதவும் மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றன. தாராள மனதுடன் அவர்கள் வழங்கும் சின்னஞ்சிறு நன்கொடைகள் விலைமதிப்பில்லாதது என்பதை இந்த 5 சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Blog-11-Image_5_1

1. அற்புத பெண்மணிகள்

blog_alternate_img

கொரோனா வைரஸ் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது கதாநாயகர்கள் சமூகத்தில் தோன்றினார்கள். ஸ்ரீராம் கார்டன் குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் செல்வி மற்றும் குமுதா ஆகியோர் மற்ற கிராம மக்களுக்கு உணவளிப்பதற்காக கணிசமான அரிசிகளை நன்கொடையாக வழங்கினர். இதுதவிர மிளகு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளனர். ஸ்ரீராம் கார்டனைச் சேர்ந்த மற்றொரு பெண்மணி சித்ராவும் சில மளிகைப் பொருட்களுடன் 5 கிலோ சர்க்கரையை நன்கொடையாக அளித்து உதவினார்.

2. பரந்த இதயங்களை கொண்ட கிராமத்து மனிதர்கள்

தொண்டாமுத்தூர் கிராமத்தில் சுப்பிரமணியம் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வசிக்கிறார். ஈஷாவின் முயற்சிகளுக்கு துணைநிற்கும் விதமாக, அவர் 75 கிலோ அரிசியையும், சில காய்கறிகளையும், மாம்பழங்களையும் நன்கொடையாக வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கு வயதாகிவிட்டது, செயலாற்றலுடன் தன்னார்வலர்கள் செய்வது போன்ற செயல்களை என்னால் செய்ய இயலாது. ஆனால், ஈஷா களப்பணி குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நான் ஈர்க்கப்பட்டேன். அதுவே என்னை நன்கொடை செய்யத் தூண்டியது. நான் நன்கொடை அளித்தவை அனைத்தும் ஏழைகளைச் சென்று சேரும் என்பதை நான் அறிவேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார். அதே கிராமத்தில் லாக்டவுனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு சிறு விவசாயியான முருகேசன் என்பவர், தனது பொருளாதார சூழலையும் பொருட்படுத்தாமல் 15 கிலோ சூரைக்காயை நன்கொடையாக அளித்தார்.

3. மனம் குளிரச் செய்த அன்புள்ளங்கள்

blog_alternate_img

நமது களப்பணிக் குழு ஆண்டிப்பாளையத்தில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு அருகில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, அங்கே கடை நடத்திவரும் உள்ளூர்வாசியான ராஜேந்திரன் அண்ணா, தன்னார்வலர்களின் முயற்சிகளை பாராட்டியதோடு, அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார். மற்றொரு பெண்மணியான தெய்வாம்பாள் நமது ஈஷா தன்னார்வலர்களை சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கூறியதுடன், அவர்கள் குடிப்பதற்கு குளிர்பானங்களையும் பரிவோடு வழங்கினார்.

4. FPO-ன் மகத்தான பங்களிப்பு

கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயங்கிவரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) நெருக்கடியான இந்நேரத்தில் தங்கள் சமூகங்களைக் காப்பதற்கான முயற்சிகளில் துணைநிற்கின்றது. ஆலந்துரை பஞ்சாயத்தில் உள்ள உள்ளூர் FPO உறுப்பினரான தனசேகர் அவர்கள் 25 கிலோ அரிசி கொண்ட 20 அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார். மற்றொரு FPO உறுப்பினரான நளினி, 20 கிலோ ஆர்கானிக் வெல்லம் மற்றும் 20 கிலோ கோதுமையை வாங்கினார். லாக்டவுன் முழுவதும், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்கள் உதவி பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் FPO செயல்பட்டு வருகிறது.

5. தனிமனிதர்களின் நன்கொடைகள்

blog_alternate_img

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் மத்தியில், பல தயாள மனங்கள் பிரகாசிக்கின்றன. நல்லூர்வயலைச் சேர்ந்த வினோத், #BeatTheVirus என்ற நோக்கில் இயங்கி வரும் ஈஷா தன்னார்வலர்களின் முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவர்களுக்கு ஏதேனும் கைமாறு செய்ய விரும்பினார். ஈஷாவின் சமையல் செயல்பாடுகளில் துணைநிற்கும் விதமாக, 200 கிலோ தக்காளியை அவர் நன்கொடையாக வழங்கினார். வினோத் நமது தன்னார்வத் தொண்டர்களை தனது பண்ணைக்கு அழைத்து, அவர்களுக்கு தக்காளியை வழங்கினார். ஒரு அரசாங்க அதிகாரியான உமா மகேஸ்வரி அவர்கள், ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்திற்கு 75 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கினார். மேலும், தீத்திபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த நளாயினி, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவளிப்பதற்காக ஈஷாவுக்கு 50 கிலோ அரிசியை வழங்கினார்.

கருணையையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் கோவையின் கிராமங்கள் முழுவதும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய கருணை உள்ளங்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்டு வரும் நன்கொடைகள் மற்றும் உதவிகளைக் கண்டு, நமது தன்னார்வத் தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். வைரஸ் தொற்றுப் பரவலால் பல சவால்கள் மற்றும் தடைகள் இருக்கும்போதிலும், கருணையும் அன்பும் இந்த கிராமப்புற மக்களை ஒன்றிணைக்கிறது.

ஈஷாவின் முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய: http://Isha.co/BeatTheVirus

Tags
No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.