loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

இந்திய விவசாயிகளை மீளாக்கடன்களில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் குன்றி வரும் வளங்களில் இருந்தும் மீட்டு அவர்கள் வாழ்வில் செழிப்பும், சந்தையில் அவர்களுக்கான இடத்தை அமைத்தும், நிலைத்தன்மையை உருவாக்குவதே ஈஷாவின் உழவன் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கும் முயற்சியின் நோக்கமாகும். ஈஷாவின் துணையோடு துவங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் வேளாண்துறை அமைச்சகத்தின் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பின் (எஸ்.எப்.எ.சி.) ஆதரவோடு செயல்படுகிறது. 2013-ஆம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதலில் துணை நிற்கின்றது.

நோக்கம்

ஈஷாவின் உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் நோக்கம் நுண்நிலை மற்றும் பெருநிலை விவசாய தீர்வுகளை அடிமட்ட விவசாயிகளுக்கும் வழங்குவது தான்.

இலக்கு

கிராமப்புற இந்தியாவின் மாற்றத்திற்கான ஒரு கருவியாக உருவாகியுள்ள இந்த அமைப்பு விவசாய பெருமக்கள் ஒன்றிணைந்து இலாபகரமான நிறுவனமாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள அவர்களுக்கு உதவிகரமாக இருந்து வழிகாட்டுதலை தன் குறிக்கோளாக கொண்டுள்ளது.

நமது செயல் முறை

ARR_FPO_Problem

பிரச்சனை

பொதுவாக விவசாயிகளின் பிரச்சனைகள் தாமதமான அறுவடை, அதிகக் கூலி, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்றவையாகும். மேலும் குறைந்த செலவில் உரங்களும் பூச்சிக்கொல்லியும் வாங்குவது, விவசாய பிரச்சனைகளுக்கான ஆலோசனை மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த செய்திகளை அறிவது போன்றவையும் இன்றைய சூழலில் இந்திய கிராமப்புற விவசாயிகளுக்கு சவாலான விஷயங்களாக உள்ளன.

ARR_FPO_Solution

தீர்வு

உழவன் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குவதற்கான செயல் திட்டம்/உத்தி விவசாயிகளின் கூட்டமைப்பை உருவாக்கி விவசாயத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் அவர்களுக்கு உதவுவதே ஆகும். உரங்கள்/பூச்சிக்கொல்லி போன்ற உள்ளீடுகள், பயிர் வளர்ப்பு மற்றும் அறுவடை, அதன் பின் அவற்றை சந்தைப்படுத்துதல் என எல்லா நிலையிலும் அவர்களுக்கு உதவுவதே நோக்கம்.

ஈஷாவின் பங்களிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் உள்ளது. விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தும் திறன், உற்பத்தித்திறன் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரம் பெருக புதிய வழிகளை அறிவது போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • மானிய விவசாய கடைகள் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி, உரங்கள் மற்றும் மற்ற பொருட்களை குறைந்த விலையில் கொடுக்கின்றனர்.
  • வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளுக்கு அறுவடைக்கும் மற்ற பணிகளுக்கும் தொழிலாளர்களை அளிக்கின்றனர்.
  • வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளின் அறுவடை மொத்த விற்பனையாளருக்கும் சந்தைக்கும் அனுப்ப குறைந்த செலவில் போக்குவரத்தும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.
  • விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களைப் பற்றியும் பயிர்களை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் அறிந்து கொள்ளும் பயிற்சிகளும் செயல் விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.
  • வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளை சந்தை விலை விகிதங்கள் பற்றி அறிவுறுத்துவதோடு மட்டுமில்லாமல் பல்வேறான பயிர்களுக்கும் நிலையான விலையை நிர்ணயிப்பதிலும் உதவுகின்றனர். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இந்த தகவல் சென்று சேர்வதனால் யாரும் ஏமாற்றப்படுவதில்லை.
  • நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் மற்றும் அரசு திட்டங்கள் செயற்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு உதவுகின்றனர்.

ஒட்டுமொத்த நன்மைகள்

  • எந்த பிரச்னைகளுமின்றி விவசாயிகளால் இப்போது அறுவடை செய்து அதை சந்தைப்படுத்தவும் முடிகிறது.
  • இடைத்தரகர்கள் மூலம் விற்பதை விட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விற்பதால் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது.
  • எல்லா வகையான இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மலிவு விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
  • விவசாயிகள் மற்றும் அரசு துறைகளுக்கு பாலமாய் அமைந்து சொட்டு நீர் பாசனம் மற்றும் பயிர்க் காப்பீடு போன்ற பலன்களை விவசாயிகள் பெற வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் வழி செய்கிறது.
  • தேசிய வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறும் வண்ணம் விவசாயிகளின் கடன் பொறுப்பு குழுக்கள் (JLG) அமைத்து அவற்றை வங்கிகளோடு இணைக்கும் பணியில் வெள்ளியங்கிரி உழவன் ஈடுபட்டுள்ளது.

தாக்கம்

 ARR_WebIllustrations_FPO_started400.svg
1063
விவசாய உறுப்பினர்களின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_FPO_womenfarmers.svg
38%
பெண் விவசாயிகள்
 ARR_WebIllustrations_FPO_over70small.svg
70 சதவிகிதம்
சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள்
 ARR_WebIllustrations_FPO_Turnover.svg
11.95 கோடிகள்
2018-2019ல் மொத்த விற்பனை
 ARR_WebIllustrations_FPO_VUPCL-13th-15.svg
13ம் இடம்
FPO தேசிய தரவரிசைப் பட்டியலில்
Success stories

1 கதைகள் உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)

வி. கிட்டுசாமியின் கதை

ஒரு தென்னை விவசாயியின் வெற்றி செய்தி

எங்கள் கிராமத்தில் என்னையும் சேர்த்து 60 சதவிகித விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 2013-ஆம் ஆண்டு முதல் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயற்பாட்டில் உள்ளது. நான் அதன் உறுப்பினர்.
முழு கதையையும் படியுங்கள்

நீங்கள் இப்படியும் உதவலாம்

donate

நன்கொடை அளிக்க

கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பட எங்களுக்கு துணைநில்லுங்கள்.
 
நன்கொடை அளிக்க
ARR_Volunteer

தன்னார்வ தொண்டு புரிய

கிராமப்புற மக்களின் வாழ்வை முன்னேற்ற, அந்த மாற்றத்தை உருவாக்க எங்களோடு கைகோர்த்திடுங்கள்!
பதிவு செய்ய
start a campaign

ஒரு பிரச்சாரத்தை தொடங்க

கிராம மக்களின் நன்மைக்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தில் இணையுங்கள் அல்லது புதிய பிரச்சாரத்தை துவங்குங்கள்.
இங்கே தொடங்கவும்
செய்தியை பரப்புங்கள்

எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு கொண்டு கிராமப்புற செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.