loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

இந்தியாவில், முக்கியமாக கிராமங்களில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது கழிவுகள்.

இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக ஈஷா திட கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்கள் தூய்மையாக, சுகாதாரமான முறையில் குப்பைக்கூளங்கள் இல்லாத சூழலை அடையும்.

நமது செயல் முறை

 SolidWaste_Problem_ARR

பிரச்சினை

"வரலாற்றிலேயே முன்பு எப்போதும் இல்லாத வகையில், இப்போது, இந்தியாவில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் நிறைய மக்கள் நிறைய குப்பைகளை தூக்கியெறிகின்றனர்; அதுவும் இருக்கும் மிகக்குறைந்த இடத்தில்" - "வேஸ்ட் ஒப் எ நேஷன்" (ஒரு நாட்டின் குப்பை) (ஹார்வர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்) என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.

உலக வங்கியின் கணிப்பின் படி 2025-ஆம் ஆண்டு இந்தியாவின் தினசரிக் கழிவு 3,77,000 டன்களை எட்டிவிடும். இதை திறமையாக கையாளாவிட்டால் நமது ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்விற்கும் இது ஒரு பெரிய கேடாக அமைந்துவிடும்.

இந்தியா தற்போது இருப்பது போல் குப்பைகளை குப்பைக்கிடங்கில் கொட்டி வந்தால் முடிவில் பெங்களூரு நகரத்தைப் போன்ற பரப்பளவு கொண்ட இடம் குப்பைக்கொட்டுவதற்கு மட்டுமே தேவைப்படும் என்று சில ஆராச்சிகளின் முடிவில் காணலாம்.

 SolidWaste_Solution_ARR

தீர்வு

செம்மேடு பகுதியை தூய்மையான கிராமமாக மற்றும் செயல் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. முதலில் கிராமக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

திறமையான கழிவு மேலாண்மைக்குரிய தேவை மற்றும் அதனால் மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் விளையும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கல்வி அந்த கிராம மக்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு நிறத்தினாலான குப்பைத்தொட்டிகள் கொடுக்கப்பட்டன: ஒன்று மக்கும் கழிவுகளுக்கும் மற்றோன்று மக்காத கழிவுகளுக்கும்.

தினமும் காலையில் நமது தூய்மை சேவையாளர்கள் (5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள்) ஒவ்வொரு வீடுவீடாக சென்று அங்குள்ள மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனி தொட்டிகளில் திரட்டிக்கொண்டு வருவார்கள். பின்னர் இந்த கழிவுகள் மின்வாகனங்களில் அருகில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். அங்கும் நமது தூய்மை சேவையாளர்கள் அந்த தொட்டிகளுக்காக காத்திருப்பர்.

குப்பைக்கிடங்கில் கொண்டுவரப்பட்ட கழிவுகள் மறுமுறை நமது தூய்மை சேவையாளர்களால் பிரித்தெடுக்கப்படும் - மக்கா குப்பைகள் அதன் வகையைப் பொருத்து பிரிக்கப்படும் - வெள்ளை நெகிழி, நிறமுள்ள நெகிழி, மூடிகள், தண்ணீர் புட்டிகள் என பல வகைகளில் பிரிக்கப்படும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுசுழற்சிக்கு உட்படுத்தத்தக்க மக்கா குப்பைகள் அதற்குரியவர்களிடம் விற்கப்படும். மற்ற மக்கா குப்பைகள் ஒரு எரியூட்டப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படும்.

கவனமாக ஆய்வு செய்யப்பட்ட மக்கும் குப்பைகள் உயர் தரமான உரமாக மாற்றப்படும். நமது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள் இதை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். எந்த கழிவும் வீணாகப்போகவில்லை என்று நாங்கள் உறுதி செய்கிறோம்.

சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் துணையோடு இந்தத் திட்டம் மேலும் ஐந்து கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது - நொய்யல் நகர், ராஜீவ் காலனி, முட்டத்துவயல், செம்மேடு மற்றும் காந்தி காலனி.

Success stories

1 கதைகள் தூய்மையான கிராமங்கள் - திடக்கழிவு மேலாண்மை

தூய்மையான கிராமங்கள் பற்றிய கதை

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்

சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது
முழு கதையையும் படியுங்கள்

நீங்கள் என்ன செய்ய முடியும்

donate

நன்கொடை அளிக்க

கிராமப்புற சமூகங்கள் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

 
நன்கொடை அளிக்க
ARR_Volunteer

தன்னார்வ தொண்டு புரிய

இந்திய கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்த, அந்த மாற்றத்தை உருவாக்க எங்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்!
பதிவு செய்ய
start a campaign

ஒரு பிரச்சாரத்தை தொடங்க

கிராமப்புற மக்கள் வாழ்வு மேம்பட நிதி திரட்டும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அல்லது புதிதாக ஒரு பிரச்சாரத்தை துவக்க வாருங்கள்.
இங்கே தொடங்கவும்
செய்தியை பரப்புங்கள்

எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு கொண்டு கிராமப்புற செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.