loader
Back to Conscious Planet Homepage

விவசாயிகள் பதிவுப் படிவம்

Solution
10 June, 2019
2:02 PM

வேளாண்காடு வளர்ப்பிற்கு மாறும்போது வருமானம் அதிகரிக்கிறது என்பதை நம் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். காவேரி வடிநிலத்தில் இருக்கும் விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பிற்கு மாறினால், அவர்களுக்கு மானியம் தருவதற்கு அரசாங்கமும் கொள்கையளவில் சம்மதம் தெரிவித்துள்ளது.

வயல் முழுவதிலும் பழமரங்கள் அல்லது வெட்டுமரங்கள் வளர்ப்பது அல்லது மரங்களுடன் சேர்த்து மற்ற பயிர்களையும் ஒரே வயலில் வளர்ப்பது வேளாண்காடு வளர்ப்பு எனப்படும்.

ஈஷாவின் மூலம் இதுவரை 69,670 விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பிற்கு மாறியுள்ளனர். அவர்களின் வருமானம் 5 - 7 ஆண்டுகளில் 3 - 8 மடங்கு உயர்ந்துள்ளது.

வேளாண் காடுவளர்ப்பு பலன்கள்:

வேளாண் காடுவளர்ப்பு பயிர்களுக்கு உதவும்:

  • உதிரும் இலை, தழைகளால் மண்வளம் அதிகரிக்கிறது.
  • பருவகால நோய்கள் மரங்களைத் தாக்காது அதோடு பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும்

வேளாண் காடுவளர்ப்பு விவசாயியின் வருமானத்தை அதிகரிக்கும்:

  • மரம் வளர்க்க செலவும் குறைவு, பணியாட்களின் தேவையும் குறைவு
  • பணநெருக்கடியான சூழ்நிலைகளில் வெட்டுமரங்கள் ஒரு காப்பீடாக இருக்கும்.
  • வாணியப் பயிர்களை சேர்த்துப் பயிரிடும்போது, வருடம் முழுவதும் வருமானம் வந்து கொண்டிருக்கும்.

வேளாண் காடுவளர்ப்பால் வெள்ளம், வறட்சி அபாயங்கள் குறையும்:

  • மர வளர்ப்பிற்கு குறைவான நீர்தான் தேவைப்படும்
  • மரங்கள் இருந்தால் நிலத்தடி நீரும் அதிகரிக்கும் நதியில் நீரோட்டமும் தொடர்ந்து இருக்கும்.

வேளாண்காடு வளர்ப்பில் ஆர்வம் இருந்தால், இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

No Comments
to join the conversation

Related Stories

Keep In Touch
Get the latest Cauvery Calling updates delivered to your inbox.
I agree to the terms & conditions
Thank you for subscription.