loader
Back to Conscious Planet Homepage

சவாலான இந்நேரத்தில் சமூக கடமை ஆற்றும் தன்னிகரில்லா இளைஞர்கள்!

Field Stories
16 June, 2020
4:39 PM

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு சற்றும் பயப்படாமல் மக்களுக்கு அவர்களின் உதவி மிகவும் தேவைப்பட்ட இந்த நேரத்தில், இளைஞர்கள் எழுச்சியோடு வந்தனர். பெரும்பாலானோரின் வாழ்க்கை காலவரையறை இன்றி முடங்கிக்கிடக்கும் இந்த சூழலில் பல இளம் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கு உதவினர்.

blog-image-33_1

அழைத்தவுடன்ஓடிவந்தஇளம்வீரர்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் #வைரஸைவெல்வோம் என்ற போரில் பங்கெடுக்க இளம் தன்னார்வலர்களுக்கு சத்குரு அழைப்பு விடுத்தார். இளைஞர் பிரதாப் உடனடியாக அதற்கு பதில்வினையாற்றி, சமூக மக்களுக்காக ஓடோடி வந்தார். சாஃப்ட்வேர் கேம் வடிவமைப்பாளராக சென்னையில் பணிபுரிந்து வந்தாலும், இந்த இளம் சமூகப் போர் வீரர் கிராமப்புறங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

பல மாதங்களாக தன் இருசக்கர வாகனத்தில் கோவை கிராமங்களைச் சுற்றி பயணித்து அங்குள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தினசரி தேவைப்படும் பொருட்கள் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை விநியோகித்து வந்தார். அவருடைய உதவி அந்த பொருட்களை விநியோகிப்பதோடு நின்றுவிடவில்லை. வயதான முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிப்படையக் கூடிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கும் வண்ணம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கினார். பிரதாப் இத்தகைய சேவையில் புதியவர் அல்ல. நதிகளை மீட்போம் இயக்கத்தில் பல நிலைகளில் அவர் பணிபுரிந்துள்ளார்.

"வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களுக்கு சேவை புரிவதன் மூலம் அவர்களின் ஆசியை பெறுவது மிக மனநிறைவான அனுபவமாக நான் உணர்கிறேன்," என்று அவர் கூறினார்.

blog_alternate_img

இரண்டாம்தாய்வீடு

கிராமப்புற மக்களின் வாழ்க்கையை ஊரடங்கு சூழல் பாதிக்க ஆரம்பிக்கும்போதே, களத்தில் செயலில் இறங்கிய தன்னார்வலர்களில் ஒருவர் விஷ்ணு. கடந்த நான்கு வருடங்களாக ஈஷாவில் முழுநேரத் தன்னார்வத் தொண்டராக இருக்கும் அவர், சில வாரங்களாக தேவராயபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் கூறும்போது, எப்போதும் இல்லாத வகையில் அந்த கிராமத்து மக்கள் ஒரு சமூகமாக ஒன்றிணைந்ததாக கூறினார்.

"கிராம மக்கள் காட்டிய அன்பும் கனிவும் மிகவும் திருப்தி அளிப்பதாக இருந்தது. நான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவன் இல்லை. ஆயினும் மக்கள் என்னை அவர்களில் ஒருவனாகவே எண்ணிக்கொண்டனர். இது எனக்கு ஒரு இரண்டாம் தாய்வீடு போல" என்று பகிர்ந்துகொண்டார்.

வயதான முதியவர்களுக்கு உதவுவது அவர் மனதுக்கு நெருக்கமான ஒரு சேவை. பல முதியவர்கள் தனியாக அந்த கிராமத்தில் வசிப்பத்தை வெகு சீக்கிரமே அவர் புரிந்துகொண்டார்.

"அந்த முதியவர்களுக்கு உதவும்போது அவர்கள் நன்றியோடு ஆனந்தக் கண்ணீரோடு இருப்பதை பல வேளைகளில் பார்க்க முடியும். அவர்களின் பிரச்சனைகள், வருங்காலத்தைப் பற்றிய பயங்கள் ஆகியவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த சூழ்நிலையிலிருந்து வலுவோடு அவர்கள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு." மண்டபத்தில் உணவு பொட்டலங்கள் கட்டுவதிலும், காய்கறிகளை பிரிப்பதிலும் இன்றும் அவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த இளைஞர்கள், சமூகத்துக்கு தான் செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகிறார்கள். முன்னெப்போதும் நிகழாத இந்த கடினமான சூழலிலிருந்து நாம் மீண்டுவரும் இந்த தருணத்தில், சமூகங்களை சீரமைக்கும் பணியில் இந்த இளைஞர்கள் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்று தெளிவாகக் காணமுடிகிறது.

blog_alternate_img

Tags
No Comments
to join the conversation

Related Stories

Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
Thank you for subscription.