loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

காலத்தே செய்த தொண்டு... #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 2

களக் கதைகள்
15 June, 2020
2:44 PM

விராலியூரில் தங்கியிருக்கும் ஒரு வயதான, மாற்றுத்திறனாளி ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக அவரது கால்களில் கடுமையான வலியை அனுபவித்து வந்தார். நமது தன்னார்வத் தொண்டர்கள் அவருக்கு உதவ முன்வந்து, சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தை (PHC) அடைய உதவினார்கள்.

Isha-Outreach-Part-2_0

ஒரு நண்பன் இருந்தால்...

விராலியூர் கிராமத்தை சேர்ந்த இந்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு சோதனை மேல் சோதனை வந்திருந்தது. சவாலான இந்த ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களாகவே தசைபிடிப்பால் கால்வலி அதிகரித்து அவதியுற்று வந்தார். இந்நிலையில், அவரது கிராமத்திற்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நோக்கத்துடன் வந்து சேர்கிறார்கள் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள். வீடுவீடாக நிலவேம்பு கசாயம் வழங்கியபடி வந்தவர்கள், கால் வலியில் அவதியுறும் முதியவரின் வீட்டை அடைகிறார்கள்.

blog_alternate_img

முன்பொரு சமயம் தமது உடல்நிலை குறித்தும், தம் சூழல் குறித்தும் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருந்தார் முதியவர். 10 வருடங்களுக்கு முன்பே முதியவரை தனியே விட்டுச் சென்றிருந்தார் அவரது மகன். இப்போது அரசுப்பள்ளி மாணவியான தனது பேத்தியையும், தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் முதியவர். 

அந்த கிராமத்தை சேர்ந்த இரு தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன், தாங்கள் வந்த வாகனத்திலேயே நரசீபுரம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக முதியவரை அனுப்பி வைத்தனர் நமது தன்னார்வத் தொண்டர்கள். 'சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை கவனித்து பதில் செயல் செய்யுங்கள்' எனும் சத்குருவின் வாசகத்தை தங்களின் வாழ்வியலாக கடைபிடிக்கும் எந்த தன்னார்வத் தொண்டரும் இதைதானே செய்வார்!

மீட்பின் பாதையில்

விவசாயக் கூலிகளாக நாமக்கல்லிலிருந்து 23 புலம்பெயர் தொழிலாளர்களின் குழு ஒன்று தேவராயபுரத்தில், எந்த உணவோ அல்லது அத்தியாவசிய சேவையோ கிடைக்காமல் சிக்கிக்கொண்ட சூழலில், ஈஷா தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு வழங்கியபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

blog_alternate_img

தாணிக்கண்டி கிராமத்தில், நமது தன்னார்வலர்கள் கிராமத்தினரிடையே உணவு விநியோகிப்பதற்கு, ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உதவி செய்தனர்.

Tags
No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.