loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

ஈஷா கிராம மருத்துவமனைகள் கிராமப்புற மக்களுக்கு தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈஷா மருத்துவமனைகள், கிராமத்தில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் , உளவியல் மற்றும் சமூக அக்கறை கிடைக்க கூடிய ஒரு சிறந்த நிரந்தர மையத்தை உருவாக்கும் வண்ணம் செயல்படுகின்றது.

தற்போது கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் மூன்று ஈஷா கிராம மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மருத்துவமனையும் அதனை சுற்றியுள்ள 30 முதல் 50 கிராமங்களுக்கு சேவை செய்கிறது.

நமது செயல் முறை

ARR_IRHC_Problem

பிரச்சனை

கிராமப்புறங்களில் உள்ளவர்கள், நகரங்களைத் தவிர வேறு எங்கேயும் தரமான மருத்துவ வசதியை பெறுவதென்பது கடினம். இதற்கான பயண செலவும் தூரமும் இடற்பாடாகின்றன. சரியான இரத்த பரிசோதனை வசதிகள் மற்றும் ஆய்வகங்கள் இல்லாததால் நோய்களை சரியான நேரத்தில் எளிதில் அடையாளம் காண முடியவதில்லை. இதனால் சிறு நோய்கள் மற்றும் வியாதிகள் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகளாக மாறும் அபாயம் உள்ளது.

ஈஷா மருத்துவமனைகள், அடிப்படை நோயறிதல் ஆய்வகம், மானிய விலையில் மருந்தகம் மற்றும் சிறு அறுவை சிகிச்சை வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும், குறைந்த செலவில் ஆங்கில மற்றும் மாற்று மருத்துவ முறைகள், அவசர மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்குகின்றன. ஒரு உள் மருத்துவரைத் தவிர, மகளிர்க்கான மருத்துவம், காது மூக்கு தொண்டை மற்றும் குழந்தை மருத்துவத்திற்காக பிரத்தியேகமாக வருகை தரும் நிபுணர்களின் குழுவும் உள்ளது.

ARR_IRHC_Solution

நமது தீர்வுகள்

ஈஷா மருத்துவமனைகளின் சேவைகள் பின்வருமாறு:

  • மலிவான சுகாதார சேவைகளை மக்களின் அருகிலேயே வழங்குதல்
  • ஆய்வகம் மூலம் சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருந்தகம்
  • குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க தகுந்த கால இடைவெளிகளில், மருத்துவ முகாம்களை நடத்துதல்
  • எக்ஸ்ரே, பல் பிடுங்குதல், பல் நிரப்புதல், பல்லின் வேர் சிகிச்சை மற்றும் பற்கூறை சரி செய்தல் உள்ளிட்ட பல் பராமரிப்பு வசதி .
  • சுகாதாரம், தொற்று மற்றும் தொற்றாத நோய்கள், சத்தான உணவு போன்றவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.

தாக்கம் கிராமப்புற மருத்துவமனைகள்

 ARR_WebIllustrations_IRHC_NoClinicsOperation.svg
3
கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில்
 ARR_WebIllustrations_IRHC_NoVillagesin2018.svg
135
2018 இல் சென்றடைந்த கிராமங்களின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_IRHC_NoPatients-2018.svg
19,436
2018 இல் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_IRHC_Labtest.svg
6,316
2018 இல் செய்யப்பட்ட ஆய்வக சோதனைகளின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_IRHC_dental PatientTreated2018.svg
1,266
2018 இல் பல் பராமரிப்பு பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_IRHC_PatientTreated2007.svg
4,73,799
2007 முதல் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை
Success stories

1 கதைகள் ஈஷா கிராமப்புற மருத்துவமனைகள்

தீபாவின் கதை

தீபாவின் கதை

என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
முழு கதையையும் படியுங்கள்

நீங்கள் செய்ய கூடியவை

donate

நன்கொடை

மருந்துகள் / மருந்துவ கருவிகளுக்கு நன்கொடையளித்து கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிட உதவுங்கள்.
நன்கொடை அளிக்க
ARR_Volunteer

தன்னார்வ தொண்டு

நீங்கள் ஒரு மருத்துவரா அல்லது கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா? எனில், எங்களுடன் கைகோருங்கள்!
பதிவு செய்ய
work with us

நம்முடன் பணியாற்ற

கிராமப்புற மக்களை முன்னேற்றுவது உங்கள் கனவென்றால், எங்களுடன் செயலாற்ற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
காலியிடங்களை காண
செய்தி பரப்ப

கிராமப்புற திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்த எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு பெறுங்கள்.

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.