loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

கிராமப் புத்துணர்வு இயக்கத்தின், பொது சுகாதார விழிப்புணர்வு இயக்கமாக ‘ஆரோக்கிய அலை’  2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. உணவு, ஊட்டச்சத்து, நோய் தடுப்பு, தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளும், பொது மற்றும் பல சிறப்பு மருத்துவ முகாம்களும் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

நமது செயல் முறை

ARR_Arogya_Problem

பிரச்சினை

உலக வங்கி அறிக்கையின்படி,

  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் 3-இல் ஒருவர் இந்தியாவில் வாழ்கின்றனர். இது பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமானது.
  • 0-18 வயதிற்குட்பட்ட குழந்தை பருவ இறப்புகளில் 50%, ஊட்டச்சத்து குறைபாட்டினாலாகும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 85 இலட்சம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர்.
  • தமிழகத்தில் உள்ள 60% பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது.

இதனால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு குழந்தை, உடல் ரீதியாக வளர்ந்து வரும் வேளையில் இது எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் ஏற்படக் கூடிய சேதம் பெரும்பாலும் மாற்ற முடியாதது. மேலும் நிரந்தரமானது. இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு அளவு இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த சூழ்நிலைக்கு, நாம் தீர்வு காண வேண்டும்.

உணவு பற்றாக்குறை மற்றும் போதிய நிதி இல்லாமை மட்டும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணங்கள் அல்ல. பல ஆண்டுகளாக, உணவைப் பற்றிய கட்டுக்கதைகளும் தவறான எண்ணங்களும் உருவாகியுள்ளன, தென்னிந்தியாவில் பலர் சத்தான உணவை உட்கொள்வதில்லை. பொதுவாக அதிக விலை கொண்ட உணவுகள் மட்டுமே ஆரோக்கியமானவை என்று நம்பப்படுகிறது. உள்ளூரில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களின் நன்மைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவை பராமரிக்க பணம் தேவை என்ற கருத்து மக்களிடம் உருவாக்கியுள்ளது. எளிய, விலை குறைந்த தீர்வுகளான, முருங்கை மற்றும் பப்பாளி மரங்களை வளர்ப்பது மற்றும் ராகி, கம்பு மற்றும் குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்வது போன்றவற்றை யாரும் நினைவில் கொள்வது இல்லை.

இதில், மக்களிடையே உள்ள, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மோசமான அறிவும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனுடன் ஊட்டச்சத்து குறைபாடும் சேரும் போது மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நாம் கவனித்த இன்னொரு முக்கிய காரணம், நாட்பட்ட நோய்களின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது. நோய் தீவிரம் ஆகும் சமயத்தில் தான் இவர்கள் மருத்துவர்களை அணுகுகிறார்கள். இது அவர்களின் நோய் தன்மை மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரித்தது.

ARR_Arogya_Solution

நமது தீர்வு

மேற்கூறியவற்றை நிவர்த்தி செய்ய, ஈஷா கிராம புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய திட்டங்களில் ஒன்றாக ஒரு தீவிர சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் டிசம்பர் 2007 இறுதியில் துவங்கப்பட்டது .

  • செலவு குறைந்த, சத்தான, உள்நாட்டில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் கிராமப்புற மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தைப் பற்றி கற்பித்து, அதன் மூலமாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுத்தல்.
  • முருங்கை இலைகள் மற்றும் பப்பாளி போன்றவற்றை வளர்ப்பது மற்றும் உட்கொள்வது போன்ற எளிய மற்றும் குறைந்த விலை தீர்வுகளை மக்களிடையே பரப்புதல். இது அவர்களின் ஆரோக்கியத்தில் கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
  • நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் காசநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோய் தன்மை மற்றும் இறப்பு விகிதத்தை குறைத்தல்.

ஆரோக்கிய அலையின் தாக்கம்

 ARR_WebIllustrations_AA_NoCampsin2018.svg
19
2018 இல் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_AA_NoPatientsin2018.svg
2, 879
2018 இல் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_AA_NoFreeCataracts.svg
246
2018ல் இலவச கண்புரை சிகிச்சைகளின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_AA_NoCampsSince2018.svg
2041
2008 முதல் நடத்திய முகாம்களின் எண்ணிக்கை
 ARR_WebIllustrations_AA_NoPatientssince2008.svg
3,44,577
2008 முதல் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை
Success stories

1 கதைகள் ஆரோக்கிய அலை

ஆரோக்கிய அலை பற்றிய கதைகள்

ஈஷா ஆரோக்கிய அலை - 6000 மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச முழு உடல் பரிசோதனை

அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையோடு இணைந்து ஈஷா அறக்கட்டளை நவம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் 6,000-க்கும் மேலான மக்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.
முழு கதையையும் படியுங்கள்

நீங்கள் என்ன செய்ய முடியும்

donate

நன்கொடை அளிக்க

ஆரோக்கிய அலையை  உருவாக்க நம்முடன் இணையுங்கள்
நன்கொடை அளிக்க
ARR_Volunteer

தன்னார்வ தொண்டு செய்ய

கிராமப்புற இந்தியாவை தொட, மக்களிடையே மலர்ச்சியை ஏற்படுத்த நம்முடன் இணைய உங்களை வரவேற்கிறோம்!
பதிவு செய்ய
செய்தி பரப்ப

கிராமப்புற திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்த எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு பெறுங்கள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.