loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

கிராம மக்களுக்காக இயங்கும் ஈஷா சமையலறை: #BeatTheVirus

களக் கதைகள்
15 June, 2020
3:06 PM

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்காக சமையலறையில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளூர் மக்களுடன் ஒன்றிணைந்து வெகுசிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் சமூக விலகலை கடைபிடிப்பதும் கச்சிதமாகவே உள்ளது. சமையல்காரர்கள், தன்னார்வலர்கள் முதல், கிராம மக்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் வரை, ஒவ்வொருவரும் சமூக ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து செயல்படுகின்றனர்.

blog-image

மண்டபத்தின் உள்ளே...

சூரிய உதயத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே, நமது சமையலறை பணியாளர்கள் தங்கள் நாளை ஒரு ஆனந்தமான அதிகாலையுடன் தொடங்குகிறார்கள். அனைத்து சமையலறை தன்னார்வலர்களுக்கும், ஒரு சவாலான நாளை எதிர்கொள்ளும் முன்னர், அவர்களின் உடலையும் மனதையும் தளர்வாக வைப்பதற்கான ஒரு சிறந்த வழி இது.

இது அதிகாலை 4 மணி… சேவாதார்கள், சமையலறை ஊழியர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் மற்றும் அப்பச்சிமாரைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் என அனைவரும் தலையில் தொப்பிகள், முக கவசங்கள், மேல் அங்கிகள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை முறையாக அணிந்தபடி பணியை துவக்குகின்றனர். காய்கறிகளை நறுக்குதல், சமையல் செய்தல், சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், தேவையான மூலப் பொருட்களை கொண்டுவருதல் மற்றும் சமைத்த உணவை பொட்டலம் கட்டுதல் போன்ற செயல்களில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர்.

blog_alternate_img

இந்த நாளுக்கான மெனு ஒரு நாளைக்கு முன்பே தயாரிக்கப்படுகிறது. எனவே அவர்கள் தேவையான நேரத்திற்கு காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் தயார்செய்து வைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள்.

காலை நேரம் முழுவதும் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் தொடர்ந்து சமையல் நடைபெறுகிறது. முதல் வேளைக்கான உணவு காலை 6.30 மணிக்கு தயாராகிறது. இரண்டாவது வேளைக்கான உணவு இரண்டு மணிநேரம் கழித்து தயாரிக்கப்படுகிறது. சில உணவுப் பொட்டலங்கள் அருகிலுள்ள பஞ்சாயத்துகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.

உணவுப் பொட்டலங்களை மொத்தமாக ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் சுமார் 10 தன்னார்வலர்கள் சமையலறைப் பணியில் உதவி செய்கிறார்கள். அவர்கள் காய்கறிகளைக் கழுவுவதிலும், உணவுப் பொட்டலங்களை வகைப்படுத்தி பிரித்து வைப்பதிலும், வீடு வீடாகச் சென்று விநியோகிப்பதிலும் உதவுகிறார்கள். சில தன்னார்வலர்கள் தினசரி சமையல் செயல்பாடுகளில் பங்கேற்பதில்லை என்றாலும், வாரந்தோறும் ஒருநாள் மக்களுக்கு சிறப்பு உணவைத் தயாரிப்பதில் அவர்கள் முன்வந்து உதவுகிறார்கள். அவர்கள் உடல் ரீதியாக உதவிபுரிவதில் சற்று பின்தங்கியிருந்தாலும், அவர்களின் மனித நேயமும் ஈடுபாடும் #வைரஸைவெல்வோம் என்ற இந்த போராட்டத்தில் வலுசேர்ப்பதாய் உள்ளது.

கனிவான உள்ளூர்வாசிகள், தாராளமான நன்கொடைகள்

நமது தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சமையலறை பணியாளர்களுடன் ஒன்றிணைந்து, உள்ளூர்வாசிகளும் தங்களால் இயன்ற எளிய வழிகளில் துணைநிற்பதன் மூலம்தான் இந்த மண்டபம் சிறப்பாக செயலாற்ற முடிகிறது. நல்லூர்வயலைச் சேர்ந்த வினோத், ஈஷாவின் பணிகளைப் பற்றி அறிந்ததும், 200 கிலோ தக்காளியை நன்கொடை செய்ய முன்வந்தார். ஆலாந்துறை பஞ்சாயத்தைச் சேர்ந்த தனசேகர் 20 பெரிய அளவு அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார். தொண்டாமுத்தூர் கிராமத்தில் சிறு விவசாயியான முருகேசன் 15 கிலோ சுரைக்காயை கொடுத்தார். இருட்டுப்பள்ளத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி 25 கிலோ பலாப்பழத்தையும் 14 கிலோ மாம்பழத்தையும் வழங்கினார்.

மக்கள், தங்கள் வீட்டில் வைத்திருந்த சிறிய அளவிலான பொருட்களைக் கூட வழங்க முன்வந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கடினமான காலங்களில், உள்ளூர்வாசிகள் பல சந்தர்ப்பங்களில் சமையலறை ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். உதாரணமாக, ஈஷா தன்னார்வத் தொண்டரான யஷ்வந்த் அண்ணா உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கான போக்குவரத்து வசதியைப் பெறமுடியாத சூழலில், பலர் ஆர்வத்துடன் தங்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை வழங்கி மக்களுக்கு உணவினை விநியோகிக்க உதவினர். பல சவால்கள் இருந்தாலும், மனிதநேயத்துடன் மக்கள் ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை நிரூபிக்கும்போது, நிலையில்லாத தருணங்களை நிச்சயம் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை நமக்கு பிறக்கிறது.

சமூக விலகலுக்கான கடுமையான விதிமுறைகளை மண்டபம் பின்பற்றுகிறது. உள்ளூர்வாசிகளுக்கும், உணவு பரிமாறும் தன்னார்வலர்களுக்கும் இடையில் சரியான இடைவெளி பராமரிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். சமூக விலகலின் முக்கியத்துவத்தை உள்ளூர் சமூகங்கள் நன்கு அறிந்திருப்பதால், தன்னார்வலர்கள் அறிவிப்புகளை திரும்ப திரும்ப வழங்குவதை நிறுத்தினர். சமையல் பணியாளர்கள், தன்னார்வலர்கள் முதல், கிராம மக்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் வரை, இந்த கடினமான காலங்களில் தங்களுக்கான பொறுப்பு என்ன என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். மண்டபம் ஒருபோதும் யாரையும் புறம்தள்ளுவதில்லை; இரண்டாவது முறை உணவு வழங்குவதிலும் எந்த தடையும் இல்லை.

ஈஷாவின் பணிகளை மேலும் அறிய: http://Isha.co/BeatTheVirus

Tags
No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.