loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

புலம்பெயர்ந்து வந்த இடத்தில் கிடைத்த புதிய சொந்தங்கள்: #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 16

களக் கதைகள்
15 June, 2020
2:58 PM

ஊரடங்கு காலத்தில் கிராமப்புற சமூகங்களில் அடைக்கலமும் ஆதரவும் பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாய் உள்ளனர். #வைரஸைவெல்வோம் என்ற நோக்கில் ஒன்றிணைந்து போராடியபடி இருந்த ஒரு பெரிய குடும்பத்தில் அவர்கள் அனைவரும் ஓர் அங்கமாக ஆகிவிட்டனர்.

Blog-16-Image_1

சொந்த ஊர் திரும்பும் ஏக்கத்தில்…

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து இந்த ஊரடங்கு காலத்தில் கோவையைச் சுற்றியுள்ள பண்ணைகளிலும் கட்டுமான தளங்களிலும் அடைபட்டிருந்த புலம்பெயர் தொழிலார்களுக்கு விடையளிக்கும் காலம் வந்துவிட்டது. கிராமப்புற சமூகங்களில் அவர்கள் ஆதரவும் அடைக்கலமும் பெற்றிருந்தாலும் அவர்கள் இப்போது தத்தம் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விருப்பத்தோடு உள்ளனர்.

பலர் தங்கள் ஊர்களை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துவிட்டாலும் பல குழுக்கள் தங்கள் பயணத்துக்கான அனுமதியை அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 பூலுவப்பட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களின் முதலாளியின் இடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். மேம்பட்ட ஒரு வாழ்வாதாரம் தங்களுக்கும் தன் குடும்பத்தினருக்கும் கிடைக்குமென்ற எதிர்பார்ப்போடு இந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாழும் சௌகரியத்தையும், பாதுகாப்பையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து கோவையிலுள்ள கட்டுமான தளங்களில் பணிபுரிவதற்காக வந்தனர்.

ஆனால், நோய்த்தொற்று பரவிவரும் அபாயகரமான சூழலில் அவர்கள் ஊரடங்கால் சிக்கித் தவித்தார்கள். ஆரம்பத்தில் சின்ன சின்ன விவசாய வேலைகள் செய்து பிழைப்பு தேடிக் கொண்டாலும், பின்னர் அவையும் குறைந்து இல்லாமல் போய்விட்டது. அவர்களின் இக்கட்டான நிலையை உணர்ந்த ஊர்மக்கள் ஈஷா தன்னார்வலர்களிடம் அவர்களைப் பற்றி தெரிவித்தனர். அன்றிலிருந்து அவர்களுக்கு தினமும் சமைக்கப்பட்ட சுவையான உணவு வழங்கப்பட்டது.

blog_alternate_img

விடைபெறும் வேளையில் வெளிப்படும் நன்றியுணர்வு…

இப்போது அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி போய் தங்கள் சொந்தபந்தங்களை காண வேண்டுமென்று ஆவல் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூறும்போது, "ஈஷா செய்த உதவிக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், இப்போது நாங்கள் ஊரிலுள்ள குடும்பத்தினரை நினைத்து கவலையாக உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி நாங்கள் ஒடிசா திரும்புவதற்கான பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அவர்களிடம் இருந்து உதவி வருமென்று நாங்கள் நம்புகிறோம்."

அவர்களைப் போலவே நாட்டின் மற்ற பலப் பகுதிகளிலும் இருந்து வந்துள்ள தொழிலாளர்களும் அதே கவலையத் தெரிவித்தனர். இந்த நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் உள்ளூர் மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவருக்குள்ளும் ஒரு ஆழமான மனிதநேயம் நிறைந்த பிணைப்பை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் சமூகத்து மக்கள் முக்கியமாக விவசாயிகள், கேரளா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள பல்வேறு புலம்பெயர் தொழிலாளர் குழுக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். "என்னோடு சேர்த்து மேலும் 10 பேர் கொண்ட குழு ஒன்று கோவை விவசாய பண்ணைகளில் வேலை தேடி வந்தோம். முதல் இரண்டு வாரங்களுக்கு எங்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எங்கும் போக வழியின்றி நாங்கள் தவித்தபோது உள்ளூரைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு தங்க இடமளித்தனர். மேலும், ஈஷா தன்னார்வலர்கள் எங்களுக்கு தினமும் சுவையான உணவை வழங்கி வந்தனர்" என்று கேரளத்தைச் சேர்ந்த அந்த தொழிலாளர் கூறினார்.

தங்களுக்கு சொற்ப வருவாய் இருந்தாலும் அவற்றை மீறி விவசாயிகள் பலர் சவாலான இந்நேரத்தில் #வைரஸை வெல்வோம் என்ற முனைப்புடன் தங்கள் கருணையை கிராமப்புற சமூகத்தின் மேல் காட்டினர். பலரும் காய்கறிகளை நமக்கு நன்கொடையாக அளித்து துன்பப்படும் மக்களுக்கு உணவளிக்க உதவினர்.

Tags
No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.