loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

வைரஸ் வெளிக்கொண்டு வந்த மனிதநேயம்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 17

களக் கதைகள்
15 June, 2020
2:58 PM

இந்த நோய்த்தொற்று மக்களுக்குள் மறைந்திருந்த சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. நாடெங்கிலும் இருந்து வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, ஈஷா தன்னார்வலர்களோடு இணைந்து கிராமப்புற மக்கள் அன்பாக உபசரித்து, உரிய பாதுகாப்பு அளித்தனர்.

ARR BeatTheVirus Part 17

வட இந்தியாவின் ஒரு மினியேச்சர்

பச்சினாம்பதி கிராமம் இப்போது ஒரு சிறிய வடஇந்தியாவை தன்னுள் கொண்டுள்ளது. மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்டை சேர்ந்த 50 புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு தங்கி வருகின்றனர். அரசு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் 80 வீடுகள் கொண்ட கட்டிட பணிக்காக அவர்கள் அங்கே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

ஆனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் மற்றும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலை வந்த பின்பு, அந்த கட்டுமானத்தளம் ஆழ்ந்த நிசப்தத்திற்கு சென்றுவிட்டது. தங்கள் பணியிடத்தில் ஏற்பட்ட இந்த அமைதி அந்த தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வண்ணம் மாறியது. ஆனால், அவர்களின் இந்த கவலைக்கிடமான நிலை மேலும் மோசமாவதற்கு முன்னர் அங்குள்ள சமூகம் அவர்களை அன்போடு அரவணைத்துக் காத்தது.

அங்குள்ள மக்கள் ஈஷா தன்னார்வலர்களின் உதவியோடு அந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுக்க #வைரஸை வெல்வோம் என்ற முனைப்புடன் செயல்பட்டனர். உள்ளூர் மக்கள் அந்த தொழிலாளர்கள் தங்க இடம் வழங்கிய சூழ்நிலையில், ஈஷா தன்னார்வலர்கள் அவர்கள் பசியைப் போக்க உணவு வழங்கியதுடன் நிலவேம்பு கசாயமும் கொடுத்து, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவினர்.

blog_alternate_img

தேடிச்சென்று உதவும் ஈஷா தன்னார்வலர்கள்

மற்றுமொரு கிராமத்தில் கேரளத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களோடு ஒரு மூதாட்டியும் கோவையில் சிக்கித் தவித்தார். "வெங்காய சாகுபடிக்காக நான் இங்கே வேலை செய்ய வந்தேன், ஆனால் பேருந்துகள் எதுவும் ஓடாத நிலையில் நாங்கள் இங்கேயே சிக்கிக் கொண்டோம். நாங்கள் தங்க இடமளித்த உள்ளூர் மக்களுக்கும், தினமும் உணவு வழங்கிவரும் ஈஷா தன்னார்வலர்களுக்கும் மிக்க நன்றி சொல்லிக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

அந்த குழுவைச் சேர்ந்த இன்னொரு தொழிலாளர் கூறினார், "தன்னார்வலர்கள் தினமும் எங்களுக்கு கொடுக்கும் உணவின் அளவு போதுமானதை விட அதிகமாகவே உள்ளது. அதில் ஒரு பகுதியை நாங்கள் அடுத்த வேளைக்காக எடுத்து வைத்துக்கொள்வோம்."

தொண்டாமுத்தூரில் "கோழி கடைக்காரர் தோட்டம்" என அறியப்படும் ஒரு பண்ணையின் விவசாயி ஒருவர், தன்னிடம் குறைந்த அளவு ஆதாரங்கள் இருந்தாலும், தனது பண்ணையை, அஸ்ஸாமைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்குவதற்காக வழங்கியுள்ளார். இந்த ஊரடங்கால் அவல நிலைக்குப் போன அந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்நோக்கில் அவர் இதனைச் செய்துள்ளார். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய தன்னிடமிருந்த ஆதாரங்கள் போதாது என்ற சூழ்நிலை வந்தபோது, அவர் ஈஷா தன்னார்வலர்களிடம் உதவி கோரினார். அன்றிலிருந்து ஈஷா தன்னார்வலர்கள் அஸ்ஸாமில் இருந்து வந்துள்ள அந்த தொழிலாளர்களுக்கு தினமும் சமைத்த உணவு அளித்து வருகின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த விவசாயி நம் தன்னார்வலர்களுக்கு பெருமளவு பீர்க்கங்காய்களை நன்கொடையாக வழங்கினார்.

விவசாயிகளும், பல உள்ளூர் மக்களும், கிராமப்புற சமூகத்தை பாதுகாக்கும் பொருட்டு நம்மோடு இணைந்துள்ளனர்.

Tags
No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.