loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா யோக மையம்!

களத்தின் கதைகள்
23 May, 2021
7:51 PM

கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ள இந்த சவாலான சூழலில் சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது.

ICA_Blog2_Image1

கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.

blog_alternate_img

அதன்படி, சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் பணியாற்றும் 400 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், ஸ்டான்லி மருத்துவமனை பணியாளர்களுக்கும் சேர்த்து 6,900 சிற்றுண்டி பாக்கெட்கள் வழங்கப்பட்டன.

blog_alternate_img

அதேபோல், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு 20,520 சிற்றுண்டி பாக்கெட்களும் வழங்கப்பட்டன. மேலும், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன.

blog_alternate_img

தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஓரிரு தினங்களில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, புதுச்சேரியில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்கள் துணை நிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது. இது தவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.